நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரின்போது முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் மன்மோகன் சிங்கை விஜய் கோயல் சந்தித்துப் பேசினார். அப்போது மன்மோகன் சிங்கிடம், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோயல், மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமான முறையில் அமைவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார். மக்களவையில் 68 மசோதாக்களும், மாநிலங்களவையில் 40 மசோதாக்களும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருப்பதாக கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV