திருத்தணி சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்ரமணியசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியிலேயே செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் மாணவர்களுக்கு உணவுக்கு தரவேண்டிய அரிசி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவநந்தி, வட்டாட்சியர் நரசிம்மன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் நள்ளிரவில் மாணவர் விடுதியில் சோதனை செய்ததில், 7 ஆயிரத்து 500 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விடுதி வார்டன் ராஜபாண்டி, சமையல் மாஸ்டர் செல்வராஜ் மற்றும் தாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விடுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து விடுதிகளிலும் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV