அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த அந்தோணி கென்னடி அடுத்த மாதம் 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் அதிபர் டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV