நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள ராணுவ முகாமில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் ராணுவ வீரர்களாக அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில், முகாமில் தேர்வு செய்யப்பட்ட தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் பயிற்சியின் போது சரிவர கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ராணுவ உயரதிகாரிகள் முனுசாமியின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அதில் முனுசாமியின் சான்றிதழ்கள் அனைத்தும் போலி என தெரிய வந்தது. அதுவும் நவீன் குமார் என்ற பெயரில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெலிங்டன் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முனுசாமி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV