புதுச்சேரியில் தொடர்ந்து ஆற்று மணல் திருட்டு தனமாக கடத்தி விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேரடியாக ஆற்று பகுதிகளில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் துணை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், புதுச்சேரி பாரதி மில் எதிராக கணேசன் என்பவரின் லாரி திருட்டு மணல் ஏற்றி வந்து கொட்டிய இடத்தில் கையும் களவுமாக சிக்கினர். இதில் லாரி உரிமையாளர் கணேசன் மற்றும் லாரி ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளனர். லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV