ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரெட்டி பள்ளி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பைரெட்டி பள்ளியை சேர்ந்த கிஷோர், தேஸ், வம்சிதர், வினோத் ஆகிய 4 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து நாசானது. இந்த விபத்து குறித்து பைரெட்டி பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV