புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள மதுபான கடை ஒன்றின் அருகே சிறுவர்கள் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக பெரியகடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மூன்று சிறுவர்கள் சிறிய பாலீதீன் பைகளில் கஞ்சா பொட்டலங்களை அந்த வழியாக செல்பவர்களிடம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மூன்று சிறுவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 600 கிராம் எடையுள்ள 119 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலையில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படனர். சிறுவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்த திருவண்ணாமலையை சேர்ந்த கஞ்சா வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV