புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் ஒன்றரை வயது மகன் ஸ்ரீவர்ஷன் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியியே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV