சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2014ல் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் மீட்கப்படும் என்றும், இந்தியர்களின் வங்கி கணக்குகளில் தலா15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று கூறியது என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவெற்றவில்லை என்றும், கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதாக கூறியுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV