புதுச்சேரியில் பாக்கி வைக்கப்பட்டுள்ள மின் கட்டணம் மற்றும் வரிகளை வசூல் செய்வது தொடர்பாக, துறை செயலர்களுடன் ஆலோசனை கூட்டம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நீண்ட காலம் கட்டணம், வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால் அவர்களின் சொத்துகளை சட்டப்பூர்வமாக அடையாளப்படுத்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அளவுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் ஏலம் விடலாம் என்றும் சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்று அந்த சொத்துகளை அரசே ஏற்கும் நடவடிக்கையும் எடுக்கலாம் எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கட்டணம், வரி அதிகளவில் நிலுவை வைத்திருப்போர் சொத்துக்கு முன்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் நிலுவை வைத்திருப்போர் பெயருடன், புகைப்படத்தையும் இனி வெளியிட வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV