விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு தள்ளி போடுவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் இது தேர்தலை கண்டு அஞ்சுவதை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன், 2 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் பார்க்கவே பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முனைப்பு காட்டுவதாக குற்றம் சாட்டினர். மேலும் பசுமை வழிச்சாலை திட்டத்தை கண்டித்து அடுத்த மாதம் 4 ஆம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV