கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக, பழையப்பேட்டையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், விதை பென்சிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதை பென்சில்களை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த பென்சில்களை எழுதிவிட்டு தூக்கி எறியாமல், அதை வீட்டின் அருகாமையில் நட்டு வைத்தால் மரம், செடிகள் வளரும் என்றும் மாணவர்கள் தவறாமல் இந்த விதை பென்சில்களை பயன்படுத்தி, மரம் நடும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வழியுறுத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV