Surprise Me!

கலப்பட பொருட்களை விற்பனை செய்யக் கூடாதென வணிகர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

2018-07-17 0 Dailymotion

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உணவு வணிகர்கள் மத்தியில் பேசிய ஆட்சியர் பொன்னையா, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றினை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து, அதனை வணிகம் செய்யும் இடத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என தெரிவித்தார். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் மற்றும் உண்ண தகுதியற்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் கண்டறிந்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் பொன்னையா கேட்டுக்கொண்டார். கலப்படமான பொருட்கள் என தெரியும் பட்சத்தில் அதனை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது என்றும் அதனை தயாரிப்பவர்களிடமிருந்து வாங்கவும் கூடாது எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon