சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது என கூறினார். எனவே சாலை விபத்துகளிலிருந்து உயிர்களை பாதுகாக்கவே பசுமை வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே மாநில அரசு உதவி செய்து வருகிறது என்றும், நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தவே பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் எதிர்ப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார். சேலம், மதுரை, நாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் சாலைகள் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்த முதல்வர், யாருடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சாலை மூலம் பயண நேரம், குறைவதுடன் மக்களுக்கான எரிபொருள் மிச்சமாகும் என்றும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே பசுமை வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார், அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் 76 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 19 சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV