சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் தொகை, கடந்தாண்டில், 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளதாக, தவறான தகவல் பரப்பி வரும் நபர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். என்.ஆர்.ஐ., எனப்படும், வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், சுவிஸ் வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட் செய்து உள்ளனர் என்றும், அவர்கள் செய்யும் டெபாசிட், இந்தியர்கள் என்ற பட்டியலின் கீழ் பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதே போல், முறையான வகையில், இந்தியர்கள் சிலர், டெபாசிட் செய்துள்ளதாக தெரிவித்த அருண் ஜெட்லி, இதற்கு அப்பாற்பட்டு, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அதை கறுப்பு பணம் என கருத முடியும் என்றும் அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் அனைத்தும் கறுப்பு பணம் கிடையாது எனவும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV