அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தால், அந்த குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து, தனி காவல் மையத்தில் அடைக்கும் வகையிலான கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது. இதற்கு அவரது மனைவியும், மகளும் கூட ஆட்சேபம் தெரிவித்ததால் டிரம்ப் தனது கொள்கையை திரும்பப்பெற்றார். அதன்படி குழந்தைகளை அவர்களின் பெற்றோரோடு சேர்க்கும் உத்தரவில் டிரம்ப், கையெழுத்திட்டபோதும், அங்கு அந்த நடைமுறை அமலுக்கு வராததால், குடியேற்ற கொள்கையை எதிர்த்தும், குழந்தைகளை அவர்களின் பெற்றோரோடு சேர்க்க வலியுறுத்தியும் வெள்ளை மாளிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரம்பின் குடியேற்ற கொள்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV