அரசு ஸ்டெர்லைட் ஆலை
மூடப்படும் என்று கொள்ளை முடிவு எடுத்து முதல்வர் அரசாணை வெளியிட்டார். மேலும் ஆலைக்கான மின்சாரம், குடிநீர் தடை செய்யப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது அரசின் கொள்கை முடிவு, நேரிடையாகவும், மறைமுகாவும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று பணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை தூத்துக்குடி தொழிற்வழிச்சாலை அமையும் போதும், தூத்துக்குடியில் கடல் நீரை குடிதண்ணீராக மாற்றும் திட்டப்பணி மற்றும் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் பணி கொண்டு வருவதற்கான ஆய்வில் உள்ளது. இந்த பணிகளின் போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாற்று பணிகள் வழங்கவும், அரசின் புதிய திட்டப்பணிகள் தூத்துக்குடி வரும் போதும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மனு அளித்தவர்கள் கூறுகையில் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.ஸ்டெர்லைட் ஆலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவே மீண்டும் ஆலை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், ஆனால் அமைச்சர் மாற்று பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டால் மட்டுமே நல்லது என்று தெரிவித்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV