மக்களவை செயலாளர் ஸ்னேகலதா ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உறுப்பினர்கள் நாளொன்றுக்கு 10 கேள்விகள் கேட்கலாம் என்ற நடைமுறை அடுத்து வரும் கூட்டத்தொடரில் இருந்து மாற்றப்படுவதாகவும், 5 கேள்விகள் மட்டுமே கேட்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூடுதலாக கேள்விகள் கேட்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அதற்கு அடுத்த நாள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV