அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 26-வது அகில இந்திய மாங்கனிக்காண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழாவில் மாவட்ட கால்நடை பரமாரிப்பு துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களில் இருந்து ஜெர்மன் ஜெப்பர்டு, டாபர்மேன், உள்ளிட்ட 16 வகையிலான, நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துக்கெண்டன. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நாய்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நாய்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கால்நடைப் பராமாரிப்பு துறையினர் சார்பில் வழங்கப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV