சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விளை நிலங்களை அளவீடு செய்து கல் நட்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த சி.நம்மியந்தல் மற்றும் ஆலத்தூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அளவிட்டு நட்ட கற்களை அகற்றியும், தங்களின் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தூக்கி எரிந்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தங்களின் வாழ்வாதரமான நிலத்தை விட்டு தர மாட்டோம் என பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV