தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவில்லை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடவுள்ளது. கூட்டம் தொடங்கியதும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்து பேசுவார்கள். அதைத்தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பதில் அளித்து பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இன்று நடைபெறும் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV