தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய சீமான் வழக்கில் தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட 20 ஆயிரம் பேரை கலைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார் . தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடப்பதாகவும், இதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV