சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கே.கே.நகர். விருகம்பாக்கம், அசோக்நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக தாம்பரம், அண்ணாசாலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பொன்னேரி, திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் விடியவிடிய பலத்த மழை பெய்தது. மழை நீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்தும், தாழ்வான பகுதிகளில் தேங்கியும் நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV