வடக்கு தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை சுற்றி பார்பதற்காக கடந்த ஜூன் 23ம் தேதி, 13 பேர் கொண்டு குழு ஒன்று சென்றுள்ளது. ஆனால் அவர்கள் குகையை விட்டு வெளியே வருவதற்குள் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் குகையின் முன்புற வாசல் மழையால் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால் மீட்புப் பணிகள் தாமதமானது. இதனிடையே காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் மழை நின்ற நேரத்தில் குகைக்குள் மீட்புப் குழு தேடுதலில் ஈடுபட்டது. அப்போது 13 பேரும் அங்கு வெள்ளம் சூழாத ஒரு இடத்தில் பத்திரமாக உயிருடன் இருந்தனர். பின்னர் மீட்புக் குழுவினர் அவர்களை பத்திரமாக வெளியே மீட்டனர். 9 நாட்களாக அவர்களின் நிலை தெரியாமல் இருந்த குடும்பத்தினர், அவர்களை கண்டதும் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV