அமெரிக்காவில் H1B விசாவில் பணிபுரிபவரின் கணவன் அல்லது மனைவிக்கு, எச்4 விசா வழங்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் ஒர்க் பெர்மிட் பெற்று அங்கு சட்டபூர்வமாக பணிகளுக்குச் செல்கின்றனர். இதனை ரத்து செய்ய டொனால்டு டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், டிரம்ப் நடவடிக்கையால் அங்குள்ள வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணைகள் சமூக ரீதியாக பிரிக்கப்படும் சூழலும், குடும்பத்தில் நிதி நிலைச் சரிவும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் H1B விசா வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்புகள் குறையும் என்றும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், அவர்களுக்கு பணி வழங்கிய தொழிலதிபர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV