காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இரண்டு அமைப்புகளையும் அமைத்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேனை நியமித்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களது பிரதிநிதிகளை நியமித்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடகா மாநிலம் தனது மாநில பிரதிநிதிகளை நியமித்தது. இந்நிலையில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகவும், மாநிலங்களிடையே உள்ள பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV