Surprise Me!

காவலரை வெட்டிய ரவுடியை போலீசார் பிடிக்கச் சென்ற போது நடத்த மோதலில் ரவுடி சுட்டுகொலை

2018-07-17 0 Dailymotion

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில் நேற்று முந்தினம் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை, 10 பேர் கும்பல் அறிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில்16 இடங்களில் வெட்டுப்பட்ட காவலர் ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அரவிந்தன் என்பவர் உட்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறைவானார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கிண்டி ஐஐடி அருகே ஆனந்தன் பதுங்கி இருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் ஆனந்தனை கைது செய்ய சென்றபோது பயங்கர ஆயுதங்களால் ஆனந்தன் போலிசாரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் இளையராஜா காயமடைந்தார். இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon