அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு காலை 6.40 மணிக்கு விரைவு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த ரெயிலில் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த மின்சார ரெயில் தாமதமாக வருகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இன்று காலை ஏராளமான பயணிகள் சென்னை செல்வதற்காக அரக்கோணத்தில் காத்திருந்தனர். 6.40 மணிக்கு வரவேண்டிய மின்சார ரெயில் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். அப்போது 7.30 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட் பாரத்தில் வந்தது. சென்னை ரெயிலுக்கு காத்திருந்த பயணிகள் இந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில் உரிய நேரத்தில் வரும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV