அவரின் டுவிட்டர் பதிவில், 525 யாத்ரீகர்கள் சிம்கோட் பகுதியிலும், 550 பேர் ஹில்சா பகுதியிலும், 500 பேர் திபெத் பகுதியிலும் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அவர்களுடன் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிம்கோட்டில், வயதில் மூத்த யாத்ரீகர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்திய யாத்ரீகர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்குமாறு நேபாள அரசின் உதவியை கோரியுள்ளதாகவும், யாத்ரீகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உதவிகள் வழங்க ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV