சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரூர், பாப்பிரெட்டுபட்டி ஆகிய பகுதிகளில், சில தினங்களுக்கு முன் நிலம் அளவெடுத்து, கற்கள் பதிக்கும் பணி முடிவடைந்தது. அவ்வாறு, முத்தானூர், ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி ஆகிய பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பின்றி நட்டு வைத்த கற்களை விவசாயிகள், கிராம மக்கள் பிடுங்கி எறிந்தனர். இதனையடுத்து வருவாய் துறையினர் போலீசாரின் பாதுகாப்போடு மீண்டும் நிலத்தை அளவெடுக்க சென்ற போது, அப்பகுதி மக்கள் மண் எண்ணெய் கேனுடன் முற்றிகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கையகபடுத்தும் அரசை எதிர்த்து முறையிட்டால் போலீசார் தங்களை சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் என்ன செய்தாலும் நாங்கள் நிலத்தை விட்டுத் தரமாட்டோம் எனவும், மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என விவசாயிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு மண் எண்ணெய் கேனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அளவிடும் பணி பாதியில் நிறுத்தவைக்கப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV