திருச்சி விமான நிலையத்தில் தினந்தோறும் தங்கம் பறிமுதல் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதே போன்று பல்வேறு நாடுகளிலிருந்து நூதன முறைகளில் கடத்தி வரப்படும் தங்கத்தினை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், தஞ்சாவூரை சேர்ந்த கோபால்சாமி என்பவர் ஆடையில் உள்ள டிக்கெட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த 2.72 லட்சம் மதிப்புள்ள 89 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பாரூக் அலி என்பவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 2.41 லட்சம் மதிப்புள்ள 79 கிராம் தங்கத்தினையும் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூபாய் 5.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV