ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, சொத்துவரி கட்டாதவர்கள் பணத்தை திருப்பி செலுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாகவும், வருவாய் ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருவாய் நாள்தோறும் 4 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 14 லட்சம் ரூபாய் வரை உள்ளதாக கிரண்பேடி தெரிவித்தார். வரி கட்டாதோர் பெயர்கள் விவரங்களை வெளியிட்டதற்கு நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சொத்து வரி கட்டாதோர் விவரம் அரசு இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். பொதுசேவை மையங்களில் எளிதாக மக்கள் பணம் கட்டும் வசதி மேம்படுத்தப்படும் எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV