சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன்கள் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு வந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஆய்வாளர் தாமஸ் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமரா உதவியோடு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் திருடிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் காலியா என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 3 செல்போன்கள் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ஜூனை போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV