தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நாட்டின் பல்வேறு இடங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் இமயமலையையொட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகாரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV