தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த 11 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கடந்த மாதம் 23ம் தேதி அப்பகுதியில் உள்ள தாம் லுயாங் குகைக்கு சென்றனர். குகைக்குள் அவர்கள் சென்றதும் பலத்த மழை பெய்ததால், குகையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் 12 பேரும் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கித்தவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்ததும், தாய்லாந்து ராணுவமும், அமெரிக்க வீரர்களும் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறுவர்கள் 11 பேரும், தாங்கள் நலமாக இருப்பதாக கூறும் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து, அவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில், பேரிடர் மீட்பு நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, அந்த பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மீட்பு பணி நடைபெறாது எனவும் மாகாண ஆளுநர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV