காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் சொற்ப அளிவிலேயே குறுவை சாகுபடியை செய்தனர். இதற்கான நெல் அறுவடை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆங்காங்கே, கடந்த 15 நாட்களாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையம் திறந்து பணியாளர்கள் வந்திருந்தாலும், நெல் மூட்டைகளை பிடிக்க சாக்கு இல்லை என்ற சாக்குபோக்கால் கொள்முதல் செய்யமுடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை டெல்டா மாவட்டங்களிலும் நீடித்து வருகிறது. இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துபோய் உள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV