8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் சுரேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், ஏற்கனவே கிருஷ்ணகிரி வழியாகவும், உளுத்தூர்ப்பேட்டை வழியாகவும் போதுமான சாலைகள் உள்ளது என்றும் தற்போது விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 8 வழி பசுமை சாலை திட்டம் தேவையற்றது என குறிப்பிட்டிருந்தார். இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி சட்டவிரோதமாக நடைபெறுவதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வு நடைபெறாமலேயே நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர், பசுமை வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது, இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே 8 வழி பசுமை சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளோடு, இந்த வழக்கையும் விசாரிப்பதாக கூறி வழக்கை வரும் 12-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதேப்போல் கிருஷ்ணமூர்த்தி என்ற நில உரிமையாளர் தொடர்ந்த வழக்கும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV