தமிழக அரசு பொது இ-சேவை மையங்களை பொது மக்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இதில் அரசே நேரடியாகவும், தனியார் மூலமும் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் கோட்டாரில் செந்தில்குமார் என்பவர் நடத்தி வந்த பொது சேவை மையத்தில், அரசு அனுமதியின்றி வாக்காளர் அட்டைகள் தயாரித்து வழங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனயடுத்து அங்கு போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்து, ஏராளமான வாக்காளர் அட்டைகள், அதனை தயார் செய்ய பயன்படுத்திய பிரிண்டர்கள், கணினி, ஸ்கேனர், உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், உரிமையாளர் செந்தில் குமார் மற்றும், ஊழியர் தக்கலை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV