டெல்லியில், அரசியல் கட்சிகளுடன் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி., சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பங்கேற்றுள்ளனர். இதேபோல் திமுக சார்பில், மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா நாளை பங்கேற்கிறார். இந்த நிலையில், ஒரேநாடு, ஒரே தேர்தல் நடத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு நேற்று அதிமுக கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே, இந்த புதிய முறை திட்டத்திற்கு திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய முறையில் விருப்பமில்லை என நாளை நடைபெறும் கூட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை திமுக தெரிவிக்கவுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV