சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான பாகங்கள், வேளாண் கருவிகள், செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில் மேலும் 16 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாகவும், படிப்படியாக இந்த அளவு 550 பில்லியன் டாலர்களை எட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் விலைக்கு நிகரான 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு தங்களின் முதல் பதிலடி. பொருளாதார வரலாற்றின் மிகப் பெரிய வர்த்தக போரை அமெரிக்கா துவக்கி உள்ளது என, சீன வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV