குன்னூர் அருகேயுள்ள சின்ன கரும்பாலத்தை சேர்ந்தவர் சிவயோகராஜ். இவரது மகன் சங்ரித், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான், இவர் பள்ளி தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் பணிபுரியும் சஞ்சய் என்ற சிறுவன், சங்ரித் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் இருவருக்குமிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அப்போது சஞ்சய் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சங்ரித்தின் வலது கை மணிக்கட்டில் வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சங்ரித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தப்பியோடிய சிறுவன் சஞ்சையை போலீசார் தேடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV