காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து சுனந்தா புஷ்கரின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். சசிதரூர், ஓட்டல் நிர்வாகம், சுனந்தாவின் நண்பர்கள், உறவினர்களிடம் தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசி தரூர் கொண்ட நட்பே, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சசிதரூர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சசிதரூர் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்தை டெல்லி நீதிமன்றம்,பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனிடையே இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சசிதரூருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV