Surprise Me!

சத்துணவுக்கான பொருட்கள் விநியோகிக்கும் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தில் 3வது நாளாக சோதனை

2018-07-17 0 Dailymotion

தரம்குறைந்த முட்டைகளை விநியோகம் செய்ததாகவும், முறையாக வருமானவரி செலுத்தாததாலும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான முட்டை உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 48 மணி நேரத்தை கடந்தும் விடிய விடிய 3வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 36 க்கும் மேற்பட்ட இடங்களில் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூர் புதுச்சத்திரம், நாமக்கல்லை அடுத்துள்ள காதப்பள்ளி, சின்ன வேப்பனம், சேலம் சாலை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை முடிவடைந்தது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எந்த விதமான பணமோ, பொருட்களோ, ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அலுவலகம் மற்றும் ஆலைகளில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon