பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV