தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மே 29-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், ஏற்கனவே பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சில சட்டமுன்வடிவுகள், சட்ட மசோதாவாக இன்று நிறைவேற்றப்பட உள்ளதாகவும், மேலும் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவும் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக் ஆயுக்தா என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழலை விசாரிக்கக்கூடிய தன்னிச்சையான அமைப்பாகும். மக்கள் கருத்தை கேட்டபின் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக அவசரமாக மசோதா தாக்கல் செய்யப்படுவது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV