கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட11 MLA-க்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த 11 MLA-க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக MLA-க்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27-ஆம் தேதி அளித்தது. அதில், 11 MLA-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மே 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மனு, நீதிபதிகள் ஏகே சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV