கர்நாடகா மாநிலத்தில் குடகு, மங்களூர், உடுப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உடுப்பியில் கடந்த 48 மணி நேரமாக பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் முழுதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உடுப்பியில், கம்பலகட்டே பகுதியை சேர்ந்த 98வயது மூதாட்டி திடீரென்று உயிரிழந்தார். மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்வதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ள காடாக காட்சி அளித்ததால் சாலை வசதி இல்லாமல் இறந்தவரின் உடலை உறவினர்கள் டயரில் படுக்க வைத்து கழுத்தளவு தண்ணீரில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV