தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. அதன் தாக்கமாக வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் கூறினர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் முதல் 2 வாரங்களில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. அந்த சமயங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கோவை மாவட்டம், சின்னக்கல்லார், நீலகிரி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கனமழை கொட்டியது. பின்னர் ஜூன் இறுதியில் கேரளாவில் பருவமழை வலுவிழந்தது. அதனால் தமிழகத்திலும் மழை குறைந்தது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் பருவக்காற்று வலுவடைந்து வருவதால் நேற்று முன்தினம் மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வெப்ப சலனத்தால் தமிழகத்தின் பிற இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV