வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், இரண்டு நாள்கள் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்களுடன் ராஜ்நாத் சிங் விவாதிக்கவுள்ளார். மேலும், வடகிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, போக்குவரத்து தொடர்பு ஆகியவை குறித்தும் அவர் விவாதிக்கவுள்ளார். இக்கூட்டத்தில், வடகிழக்குப் பிராந்திய மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களை ஊக்குவிப்பது, நீர்வளங்களை நிர்வகிப்பது, விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவது, வனப் பரப்புகளை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அந்த மாநில முதல்வர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV