சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் வசிப்பவர் மூர்த்தி.இ வர் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுசேரியில் உள்ள இளைய மகன் கவிராஜ் வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பவந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது், பீரோவை உடைத்து 90 சவரன் நகை, 2 லட்சம் பணம் , 8 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கபட்டிருந்தது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கைரேகை நிணபுர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தும் , அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV